Skip to main content

பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் 'ஆவின் நெய்'

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

'Avin Ghee' featured in Pongal collection

 

பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு  அறிவித்திருந்தது. அதில் நெய்க்கான ஆர்டர் ஆவினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

கடந்த 17 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவில், 'பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பச்சை அரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை, உப்பு உள்ளடங்கிய 20 பொருட்கள் கொண்ட தொகுப்பு துணிப்பையுடன் வழங்கப்படும். அதேபோல், இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் 20 பொருட்கள் கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். மொத்தமுள்ள 2,15,48,060 குடும்பங்களுக்கு ரூபாய் 1,088 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

'Avin Ghee' featured in Pongal collection

 

எப்பொழுதுமே பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் கரும்பு அந்த அறிவிப்பில் இடம்பெறாதது விவசாயிகள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. பொங்கல் தொகுப்பிற்காகத் தமிழ்நாடு அரசு விவசாயிகளிடமிருந்து 18 ரூபாய்க்குக் கரும்பை (ஒரு கரும்பின் விலை) கொள்முதல் செய்துவந்த நிலையில் இந்த வருடமும் தமிழ்நாடு அரசு கரும்புகளை வாங்கும் என விவசாயிகள் நம்பியிருந்தனர். ஆனால் கரும்பு இடம்பெறாத அறிவிப்பு வேதனையைத் தருவதாகவும் பொங்கல் தொகுப்பில் கரும்பைச் சேர்க்க வேண்டும் எனவும் கடலூரில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பன்னீர் கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

 

இதனைத்தொடர்ந்து அன்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, 'தமிழ்நாடு அரசு கொடுக்கும் பொங்கல் தொகுப்பில் துணிப்பையுடன் 20 பொருட்கள் வழங்கப்படும். அதேபோல், கூடவே முழு கரும்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்' என்றார். இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள  நெய்க்கான ஆர்டர் ஆவினுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பிற்காக 2.15 கோடி மதிப்பில் 100 மில்லி லிட்டர் நெய் பாட்டில்கள் ஆவினில் தயாரிக்கப்பட்டு வருகிறது. 135 கோடி ரூபாய் நெய் விற்பனையால்  19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள்  பயன்பெறுவர் என ஆவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்