நீதித்துறையை அவமதிக்காதீர்கள் - கமல்ஹாசன் வேண்டுகோள்
நீட் எதிர்ப்பு போராட்டம் பற்றிய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:
நாம்தான் நீதித்துறையை உருவாக்கினோம். அதை பயன்படுத்திக் கொள்வதுடன், சரிசெய்ய வேண்டும். அது நம்மால் முடியும். அதை விடுத்து, நீதித்துறையை அவமதிப்பதோ, திட்டுவதோ கூடாது. நமது அரசியல் சட்டம், அனைத்து விவாதங்களையும் எதிர்கொள்ளும் வகையில் ஆரோக்கியமானது. எனவே, அதை கொண்டு வாருங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.