வேலூரில் வீட்டில் புகுந்து அண்டாவை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
![attack for the North Indian youth who tried to theft](http://image.nakkheeran.in/cdn/farfuture/vo093YxGB9VDtT5ly6jQ1ZiYMs5PXD5nGTcYj7QbL7k/1557418903/sites/default/files/inline-images/ASDSDASASASAS.jpg)
வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்ற பெண் வீட்டைப் பூட்டாமல் வெளியில் சென்றிருந்த பொழுது, வீட்டின் உரிமையாளர் வெளியே சென்றதும் மறைந்திருந்து நோட்டமிட்ட வடமாநில இளைஞன் ஒருவன் வீட்டிற்குள் புகுந்து அண்டா உள்ளிட்ட பாத்திரங்களை திருட முயன்றுள்ளான்.
![attack for the North Indian youth who tried to theft](http://image.nakkheeran.in/cdn/farfuture/lgj05VAgWGOA8hV4Ai__ajdTN6XuvzVPGB7SyjjKmVM/1557418919/sites/default/files/inline-images/ASDSDSDSDSDSSSDS.jpg)
![attack for the North Indian youth who tried to theft](http://image.nakkheeran.in/cdn/farfuture/-P2opvYrbgz-vt30nUF_PiiPAifMDEQxveHw3EySVn0/1557418936/sites/default/files/inline-images/ASASASSASAS.jpg)
இதைக்கண்ட அப்பகுதியினர் திருட முயன்ற அந்த இளைஞனை துரத்திப் பிடித்து அவனை மின் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தனர். அதன்பிறகு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த இளைஞனை விசாரித்ததில் அவன் பெயர் கலிசா என்பதும் சிறு சிறு திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
சில நாட்களுக்கு முன்பு கோவில் உண்டியலில் திருட முயன்ற கலிசா பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டு தர்ம அடி வாங்கியது தெரியவந்தது.