தமிழ்நாடு அரசு, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் பெருந்துறை, திருவாச்சி நீரேற்று நிலையப் பணிகளுக்கான பூமிபூஜை விழா இன்று நடைபெற்றது. ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் பி.சி. துரைசாமி, சாந்தி துரைசாமி தலைமையில் நடைபெற்றது. பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு. வெங்கடாச்சலம் பூமிபூஜை மற்றும் திட்ட பணிகளை தொடங்கி வைத்து,திட்டத்தைப் பற்றியும் அதன் பயன்பாடு குறித்தும் சிறப்புரையாற்றினார்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மன்மதன் அனைவரையும் வரவேற்றார். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜகுமார், ஆய்வாளர் சரவணன், அத்திக்கடவு அவினாசி திட்ட மூத்த ஒருங்கிணைப்பாளர்கள் டி.கே.பெரியசாமி, முருகபூபதி, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்தி, துணைப் பெருந்தலைவர் உமா மகேஸ்வரன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பெரியசாமி, பெருந்துறை அமைதிப் பூங்கா அறக்கட்டளை தலைவர் டி.என்.சென்னியப்பன், செயலாளர் சேப்டி சௌந்தரராஜன், இணைச் செயலாளர் பல்லவி பரமசிவன், சர்வ கட்சி நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது பெருந்துறை ஊத்துக்குளி என சுமார் 11 ஊராட்சி ஒன்றியங்களில் குடிநீர் தட்டுப்பாடு மக்களுக்கு இருக்காது. மேலும் 120 குளங்களுக்கு நீர் நிரப்பப்படும் ஆக வறண்ட பகுதியாக இருந்த பெருந்துறை பகுதி வளர்ச்சி பகுதியாக மாறும் என்கிறார்கள் விவசாயிகள்.