நாளை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் தற்போது தெரிவித்துள்ளது.
சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக பிப்.19ஆம் தேதி சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம். இந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி தரும் என நம்புகிறோம் என இஸ்லாமிய அமைப்புகள் கூறியிருந்த நிலையில், தற்போது இது தொடர்பான பொதுநல வழக்கில் மார்ச் 11 ஆம் தேதி வரை சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை நடத்த இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்நிலையில் தற்போது திட்டமிட்டபடி நாளை சிஏஏ வுக்கு எதிராக நாளை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜா முகைதீன் பேட்டியளித்துள்ளார். மேலும், தேசியக் கொடியை ஏந்தி அமைதியான முறையில் வரம்பு மீறாத வகையில் போராட்டம் நடைபெறும், இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க வில்லை என்பதால் நீதிமன்றம் விதித்த தடை எங்களுக்கு பொருந்தாது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.