Skip to main content

லஞ்சமா கேக்குறீங்க... வசமாய் சிக்கிய அரசு அதிகாரி! 

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Asking for a bribe... a government official caught in the trap!

 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா கனகம்மா சத்திரம் பகுதியில் வசித்து வருபவர் பாபு. இவர் வணிக வளாக கடைகள் கட்டி உள்ளார். இதற்கு மின் இணைப்பு பெறுவதற்கு அதே பகுதியில் செயல்படும் மின்சாரத் துறையின் இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த உதவிப் பொறியாளர் புஷ்பராஜ் மின் இணைப்பு வேண்டுமென்றால் ரூ.3000 லஞ்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

 

உடனடியாக பாபு 3 ஆயிரம் லஞ்சப் பணத்தை உதவி பொறியாளர் புஷ்பராஜிற்கு அவரது செல்போனிற்கு ஜி-பே மூலமாக பணத்தை அனுப்பி உள்ளார். அப்போது மீண்டும் லஞ்சப் பணம் 3000 ஆயிரம் வேண்டுமென்று பாபுவிடம் உதவி பொறியாளர் புஷ்பராஜ் கேட்டுள்ளார். உடனடியாக பாபு, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ராமச்சந்திர மூர்த்தியிடம் புகார் கொடுத்துள்ளார்.

 

அந்தப் புகாரை பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ரசாயனம் தடவிய 3 ஆயிரம் ரூபாயை பாபுவிடம் கொடுத்து அனுப்பினர். அதனை பாபு, உதவி பொறியாளர் புஷ்பராஜிடம் அவரது அலுவலகத்தில் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், கையும் களவுமாக ரூபாய் 3000 லஞ்சப் பணம் பெற்ற உதவிப் பொறியாளர் புஷ்பராஜை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்