வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி அக்டோபர் நான்காம் தேதி வெளியான படம் அசுரன். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். படம் ரிலீஸாகி விமர்சன ரீதியாகவும், பார்வையாளர்களையும் கவர்ந்தது. தனுஷின் படம் வணிக ரீதியாக முதன் முதலில் ரூ.100 கோடி வசூல் ஈட்டிய படம் அசுரன் என்று புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த படம் பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக வைத்து எடுத்த படமாகும். இந்த படத்தில் வரும் முக்கிய கருத்தான உழைக்கும் மக்களிடம் இருந்து நிலத்தை பறிப்பது மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் செருப்பு போட்டு போகக் கூடாது என்றும், இது தொடர்பான கேள்வி நாகர் சேனை அமைப்பின் தலைவர் அருங்குணம் விநாயகத்திடம் கேட்கப்பட்டது. இந்த கேள்வி குறித்து கூறிய அவர், சமீபத்தில் அசுரன் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் எனக்கு வந்தன.
பஞ்சமி நிலத்தை பற்றி தாழ்த்தப்பட்டவர்கள் பேசுவதை விட, அவர்களின் வரலாறு பேசும் போது தான் பெரிய உணர்ச்சிகரமாக இருக்கும் என்பதை பார்க்கிறேன் அதை வரவேற்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் இப்பவும் செருப்பு போட்டு போகக் கூடாது என்று நிறைய கிராமத்தில் உள்ளது. இந்த மாதிரியான காட்சிகள் இதுவரை யாரும் நேரடியாக எடுக்கவில்லை. இந்த படத்தில் தான் நேரடியாக எடுத்துள்ளனர் அதற்கு அசுரன் படத்திற்கு நன்றி என்று கூறினார். இன்னைக்கும் தென் மாவட்டங்களில் நிறைய ஊர்களில் இப்படி இருக்கிறது. இதை யாரும் கேட்க முடியாது. ஏனென்றால் அதற்கு அரசியவாதி முழு ஒத்துழைப்பு கொடுக்கிறான் என்றார். இந்த மாதிரி சம்பவங்கள் ஒரு ஊர்லயா நடக்குது, இது மாதிரி 5000 கிராமங்களில் நடக்குது என்று கூறினார் .
மேலும் நான் படம் எடுத்திருந்த கூட மிகைப்படுத்தி எடுத்து விட்டேனு சொல்லலாம், இயக்குனர் வெற்றிமாறனுக்கு தெரியாத எவ்வளவு கள ஆய்வு செய்து எடுத்திருப்பார். அவர் 1980இல் நடந்த விஷயங்களை சொல்லவில்லை இன்றைக்கு நடக்கிற விஷயத்தை தான் சொல்லிருக்கிறார் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சோசியல் மீடியாவில் பாத்தீங்கன்னா ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி சைக்கிள்ல போன ஒரு பையன் தலையில் செருப்பை எடுத்து வைத்து அடித்த காட்சி இருக்கிறது. அதனால வெற்றிமாறன் இன்னைக்கு நடைபெற விஷயத்தை தான் எடுத்துள்ளார் என்றும் கூறினார். அதோடு இத பத்தி யாருகிட்ட சொல்ல முடியும். செருப்பு எடுத்து அடித்தவனோட அண்ணன், அவங்க உறவினர்கள் தான் எம்.பி, எம்.எல்.ஏ.வாக இருக்கான், அதிகாரத்தில் இருக்கான் அப்புறம் எப்படி நடவடிக்கை எடுப்பாங்க என்றும் கூறினார்.