திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டு பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுர்ஜித் உயிருடன் திரும்ப வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள வள்ளலார் குடிலில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்கள், சிறுவர்கள், குழந்தைகள், மாணவர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அப்போது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் இருந்து, யாதொரு குறையும் இன்றி, உயிருடன் காப்பாற்ற பெற வேண்டும் என்று வள்ளலாருக்கு வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தனர். வள்ளலார் குடில் தலைவர் தியாக.இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டு பிரார்த்தனையின் போது குழந்தை சுர்ஜித் மீட்கப்படும் வரை "ஒரு வேளை, உணவு மட்டுமே" எடுத்துக் கொள்வதாக உறுதியேற்றனர்.