Published on 05/03/2019 | Edited on 05/03/2019

கடலூரில் பேருந்து நிலையத்தில் பரணிகுமாரி (34) என்ற பெண் ரூ.2000 கள்ளநோட்டு மாற்ற முயன்ற போது சாலையோர வியாபாரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் கள்ளநோட்டு மாற்ற முயன்ற பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் ரூ.69,700 மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவைகள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.