தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே உள்ளது வடுகப்பட்டி. இப்பகுதியில் உள்ள பிள்ளைமார் தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ் பிரபு. இவர் தேனியில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.
விக்னேஷ் பிரபு நேற்று வழக்கம் போல் தனது சொந்த ஊரான வடுகப்பட்டிக்கு வந்தார். வரும் போதே மதுபோதையில் வந்துள்ளார். அதுவும் நீதிபதி பாதுகாப்புக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவரிடம் எஸ்.எல்.ஆர். துப்பாக்கி மற்றும் ஒரு கைத்துப்பாக்கியும் எடுத்து வந்து இருந்தார். இப்படி ஒரு நீதிபதி வீட்டுக்கு பாதுகாப்புக்கு போகப் போவது தெரிந்தும் குடித்து விட்டு வந்து இருக்கிறயா? எனது அவரது தந்தையான கால் ஊனமுற்ற மாற்றுத்திறளாளி செல்வராஜ் தனது மகனை கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ்பிரபு தனது தந்தை என்றும் பார்க்காமல் தன்னிடம் இருந்த எஸ்.எல்.ஆர். துப்பாக்கியால் தந்தையின் மார்பில் சுட்டார். இதில் மாற்றுத்திறளாளியான தந்தை செல்வராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விஷயம் பெரியகுளம் தென்கரை போலீசுக்கு தெரிய வரவே உடனே வடுகப்பட்டிக்கு விசிட் அடித்து விக்னேஷ்பிரபுவை கைது செய்து துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.
விக்னேஷ்பிரபுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அப்படி இருந்தும் தொடர்ந்து குடிபோதையில் வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததின் மூலம் தற்போது விக்னேஷ் பிரபுவின் மனைவி கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.
போலீசான விக்னேஷ்பிரபு குடி போதையில் தனது தந்தையையே சுட்டு கொன்ற சம்பவம் வடுகப்பட்டி மட்டுமல்லாமல் தேனி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on 06/06/2018 | Edited on 06/06/2018