ஆர்.கே.நகரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு
சென்னை தண்டையார்பேட்டையில் நேற்று கடத்தப்பட்ட இரண்டரை வயது குழந்தை முகமது சாபு இன்று பத்திரமாக மீட்கப்பட்டார். 7 தனிப்படைகள் கொண்டு தேடப்பட்டு வந்த நிலையில் கொடுங்கையூர் அருகே குழந்தையை மீட்டது போலீஸ்.
நேற்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை சைக்கிளில் கடத்திச்சென்ற சென்னை காரனேசன் நகரைச்சேர்ந்த 16வயது சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.