அரியலூர் மாவட்டம் டெல்டா பகுதியான திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கின்றது. பனிப்பொழிவின் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் சாலைகள் மற்றும் தெருக்கள் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "ஊட்டி போல பனி பொழிவதால் வீட்டிற்குள்ளேயே பெரும்பாலான மக்கள் முடங்கி கிடப்பதாக தங்களது கருத்தை பதிவு செய்தனர். இது குறித்து பேருந்து ஓட்டுநர்கள் கூறும் போது வழக்கம் போல் வாகனத்தை இயக்க முடியவில்லை. காரணம் எதிரில் வரும் வாகனங்கள் தெரியமாட்டேங்குது. இதனால் பேருந்துகளை சரியான நேரத்திற்கு இயக்குவது என்பது சவாலான பணியாக உள்ளது" என தங்களது கருத்தை பதிவு செய்தனர்.
விவசாயிகள் கூறுகையில், "வயல்வெளிகளுக்கு நீர் பாய்ச்சும் பணிகளுக்கு ஆட்கள் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் வெயிலுக்கு முன்பாக கூலி ஆட்கள் வந்து தண்ணீர் பாய்ச்சும் போது அதிக அளவில் தண்ணீர் விரைவாக வயலுக்கு பாய்ந்துவிடும். ஆனால் அதிக பனிப்பொழிவின் காரணமாக ஆட்கள் தாமதமாக வருவதால் தண்ணீர் பாய்ச்சும் பணிகளில் தொய்வு ஏற்படுவதாக தங்களது கருத்தை பதிவு செய்தனர்.