அரியலூர் மாவட்டம் செந்துறை தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மு. ஞானமூர்த்தி, "செந்துறை ஒன்றியம் கோட்டைக்காடு வெள்ளாற்றில் சுமார் ரூ.11 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
பகலில் பாலம் கட்டுவதற்கு மணலை பொக்லைன் எந்திரம் மூலம் குவித்து வைக்கிறார்கள். இரவு நேரத்தில் கனரக டிப்பர்களில் அள்ளி வெளியில் விற்ப்பனை செய்கிறார்கள். அதுமட்டுமல்ல பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மிக்சர் பிளாண்டில் ஜல்லி மணல் சிமெண்ட் ஆகியவற்றை கலந்து லோடுலோடாக வெளியில் அனுப்பி விற்பனை செய்கிறார்கள்.
இந்தச் சட்டவிரோதச் செயலை அங்குப் பணியாற்றும் அதிகாரிகள் செய்கிறார்களா? அல்லது ஒப்பந்ததாரர் செய்கிறாரா என்பது தெரியவில்லை. பாலம் கட்ட பில்லர்கள் போடப்பட்டிருக்கும் தளத்தில் உள்ள மணலையும் அள்ளியுள்ளார்கள். இதைத் தொடர்ந்து செய்தால் பில்லர்கள் வலுவிழந்து போவதற்க்கு வாய்ப்பிருக்கிறது. பாலம் கட்ட மணல் அள்ளுகிறோம் என்கிற போர்வையில் நவீன மணல் திருட்டு நடைபெறுகிறது.
அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து இந்த மணல் திருட்டைத் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் விரைவில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து கடுமையான போராட்டம் நடத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.