Skip to main content

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் - கலெக்டர் டி.ரத்னா 

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

அரியலூர் மாவட்ட கலெக்டராக கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் பணியாற்றி வந்த டி.ஜி.வினயை மதுரைக்கு பணியிட மாற்றம் செய்தும், முன்பு திருவள்ளூரில் சப்- கலெக்டராக பணிபுரிந்த டி.ரத்னாவை அரியலூர் மாவட்ட கலெக்டராகவும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ரத்னா நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். 
 

ariyalur gets a new collector


அப்போது கலெக்டர் டி.ரத்னா நிருபர்களிடம் கூறுகையில், "அரியலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், வேளாண்மை, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும், மக்கள் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்" என்றார்.


ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் அனுஜார்ஜ், லட்சுமி பிரியா, விஜயலட்சுமி ஆகிய 3 பெண் கலெக்டர்கள் பணிபுரிந்துள்ளனர். தற்போது நான்காவது பெண் கலெக்டராக டி.ரத்னா பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்