அரியலூர் மாவட்ட இளைஞர்கள் பலர் தங்களை இயற்கையை மீட்டெடுக்கும் பணியில் அர்ப்பணித்து வருகிறார்கள். இந்நிலையில் கடலூர் மாவட்ட தன்னார்வலர்களுக்கு அரியலூர் மாவட்ட தன்னார்வலர்கள் 5 ஆயிரம் பனை விதைகள் விலையில்லாமல் கொடுத்தது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டம் விகைகாட்டி அருகில் உள்ள நெருஞ்சிக்கோரை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் இணைந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் வழியில் பல்வேறு இயற்கை மீட்டெடுப்பு பணிகளை பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட இளைஞர்கள் சிலர் நெருஞ்சிக்கோரை கிராம இளைஞர்களை தொடர்பு கொண்டு தங்களது கிராமத்தில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றி பனை விதைகள் விதைக்க வேண்டும் உதவிடுங்கள் என கேட்டவுடன், கடந்த சில நாட்களாக 5 ஆயிரம் பனை விதைகளை சேகரித்து (விலையில்லாமல்) ஒரு பைசா கூட வாங்காமல் கடலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வழங்கியுள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி இயற்கை வள்ளல்களை போற்றுவோம் என்றும் இவர்கள் அரியலூர் மாவட்டத்தின் பெருமைக்குரியவர்கள் இயற்கையை போற்றுவதற்காக தன்னலம் கருதாது அன்றாடம் அயராது உழைத்து வரும் இளைஞர்கள் கூட்டம் நெருஞ்சிக்கோரை கிராமத்தின் ஸ்வீட் தொண்டு சேவை உள்ளங்கள்! தொடரட்டும் உமது சேவை என்றும் பதிவிட்டுள்ளனர் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.