வேலூர் மாவட்டம் ஆம்பூர் சின்ன மசூதி தெருவில் மருத்துவர் நூர்சயீத் என்பவர் புதியதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக ஒரு பொறியாளரிடம் ஒப்பந்தம் போட்டுள்ளார் நூர்சயீத். அந்த பொறியாளர் கூலி ஆட்களை வைத்து அந்த கட்டிடத்தை கட்டி வருகிறார். பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றுவது கட்டிட தொழிலாளிகளின் வழக்கம்.

பாதுகாப்பாக வேலை செய்ய வேண்டும் என தொழிலாளிகள் முன்வைத்தால் அதனை வேலை தரும் மேஸ்திரிகள் ஒப்புக்கொள்வதில்லை. மறுநாள் வேலைக்கு வரவேண்டாம் எனச்சொல்லிவிடுவார்கள். இதனால் கட்டிட தொழிலாளிகள் பாதுகாப்பு சாதனங்கள் எதையும் கேட்பதில்லை.
அதேபோன்றுதான் மருத்துவரின் புதிய இல்ல கட்டுமான பணியில் பலராமன் என்கிற தொழிலாளி வேலை செய்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது மேலிருந்து கீழே விழுந்து தலை உடைந்து சம்பவயிடத்திலேயே இறந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய ஆம்பூர் நகர போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.