Skip to main content

நீயா நானா பிரச்சனையில் வெம்பி அழும் அரவக்குறிச்சி போலிஸ் ! 

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

 

அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் நீயா நானா என போட்டி போட்டுக்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் தொகுதி முழுவதும் ரவுண்டு அடித்து பிரச்சாரம் செய்கிறார்கள். 

 

s

 

கடந்த மாதம் நடந்த, எம்பி. தேர்தலின் போது , போலீசார் வேட்பாளர்களுடன் பிரச்சாரம் செய்யும் அனைத்து இடங்களுக்கும் பாதுகாப்புக்கு செல்லவில்லை. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இருந்தனர். அதனால் அவர்களுக்கு அந்த பாதுகாப்பு பணி பெரிய பிரச்சனையாக தெரியவில்லை. கடைநாளில் ஏற்பட்ட சின்ன சலசலப்பு தவிர பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு பணி என்பது மிகவும் ஈசியாக இருந்தது. 


ஆனால், தற்போது நடப்பது இரண்டு பேருக்கு வாழ்வா சாவா என்று போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்வதால் அவர்களுக்கு பிரச்சாரம் செய்யும் அத்தனை இடங்களும் கடுமையாக இருக்கிறது. இதனால் வேட்பாளர்களுடன், ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில், நான்கு போலீசார் பாதுகாப்புக்கு செல்கின்றனர். 

 

நாட்கள் செல்லச் செல்ல போட்டி கடுமையாக இருப்பதால், திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரச்சாரங்கள் தொடர்ச்சியாக இருப்பதாலும் ஆட்களை திரட்டுவதற்கு தி.மு.க., - அ.தி.மு.க., கட்சி வேட்பாளர்கள் தினமும், 30க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் பிரச்சாரம் காலை, 7:00 மணிக்கு துவங்கி, இரவு, 10:00 மணி வரை பிரச்சாரம் செய்வதால், முழுநேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பதால் குறிப்பிட்ட நேரத்துக்கு வீட்டுக்கு செல்ல முடியவில்லை எனவும் அவர்கள் தான் ஓட்டுக்காக அலைகிறார்கள் எங்களையும் பாதுகாப்பு என்கிற பெயரில் அலைய வைக்கிறார்கள் என்று போலீசார் வெம்பி அழுகிறார்கள். இதே நிலைதான் மற்ற 3 தொகுதிகளிலும் என்கிறார்கள். 
 

சார்ந்த செய்திகள்