திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கமண்டல நாகநதி பகுதியின் கரையோறும் புதுகாமூர் பகுதி உள்ளது. இங்கு பல குடியிருப்புகள் உள்ளன. இங்கு பூ வியாபாரம் செய்யும் முத்தாபாய் என்பவரும் வசித்து வருகிறார். நவம்பர் 15ந்தேதி காலை முத்தாபாய் வீட்டில் பயரங்க வெடிச்சத்தம் கேட்டது. இதனால் வீடுகளில் தூங்கிக்கொண்டு இருந்த அந்த தெருவாசிகள் ஓடிவந்து பார்க்க, மூன்று வீடுகள் இடிந்து விழுந்திருந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்களும், இளைஞர்களும் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.
இதுப்பற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இடிந்து விழுந்த வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதில் காமாட்சி, அவரது மகன் ஹேம்நாத், சந்திரம்மா என்பவர் என இதுவரை 3 பேர் பலியாகியுள்ளதாக தெரிகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 6 பேரை தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் இருந்து மீட்டனர். இன்னும் சிலர் கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளனர் எனக்கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஆரணி டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.