Skip to main content

8 வழிச்சாலைக்கு மேல்முறையீடு... தோல்விகண்ட நேரத்திலும் மக்களுக்கு துரோகம்- ஸ்டாலின்

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

எட்டு வழி சாலைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செய்துள்ள மேல்முறையீட்டை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 

சேலம் சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம்  தடைவிதித்திருந்த நிலையில் உயர்நீதிமன்றதின் இந்த உத்தரவை எதிர்த்து  இன்று தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

 

8way

 

இந்த வழக்கானது ஜூன் 3 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்த நிலம் கையகபடுத்தும் முயற்சியில் இருந்த இந்த 8 வழி சாலை திட்டதிற்கு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தடைவிதித்து 8 வாரத்திற்குள் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியிருந்தது. 

 

8way

 

இந்நிலையில் தமிழக அரசு தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் இந்த செயல் மக்களுக்கு செய்யும் துரோகம். இப்போது அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் நிலைப்பாடு என்ன என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்