![Annamalai University Student Assistance Center Opens!](http://image.nakkheeran.in/cdn/farfuture/50Ij000y3QQjuww6mLYJmBT8u9gCgMA8MefR7jECKwU/1646760288/sites/default/files/inline-images/u3323.jpg)
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுத்துறையில் தேர்வு சம்பந்தப்பட்ட தகவல்களை மாணவர்கள் பெறுவதற்காக மாணவர்கள் உதவி மையம் இன்று (08/03/2022) பல்கலைக்கழக துணைவேந்தர் இராம கதிரேசன் திறந்து வைத்தார். இம்மையத்தில் உள்ள இரு அலைபேசி எண்கள் 73977- 24062, 63694- 68133 மூலம் மாணவர்கள் தேர்வு சம்பந்தமான சந்தேகங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
இதன் மூலம் மாணவர்களின் நேரமும், அவசியமற்ற பயணமும் தவிர்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பதிவாளர் சீத்தாராமன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பல்வேறு இயக்குநர்கள், இணை மற்றும் துணை தேர்வுக் கட்டுபாட்டு அதிகாரிகள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலக ஊழியர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத், துணைவேந்தரின் நேர்முகச் செயலர் பாக்கியராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்..