Published on 20/09/2020 | Edited on 20/09/2020
தமிழக சட்டமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அண்ணா பல்கலைகழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதற்கான சட்ட மசோதாவை கடந்த 16- ஆம் தேதி பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.
42 வருட கால சிறப்பு மிக்க அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து பெயரை மாற்றினால், மாணவர்களின் சான்றிதழ்களில் பாதிப்பு ஏற்படுவதுடன், வெளிநாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கேள்விக்குறியாகும் என பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், நாளை முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடவுள்ளதாக பேராசிரியர் சங்கம் அறிவித்துள்ள நிலையில், எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என தெரிவித்துள்ளனர்.