Skip to main content

அண்ணா பல்கலை தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

 Anna University examination fee hike cancelled

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணங்கள் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என நேற்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. அறிவிப்பின்படி, ஒரு தாளுக்குத் தேர்வுக் கட்டணம் 150 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு 300 ரூபாய் தேர்வுக் கட்டணம் இருந்த நிலையில் தற்போது 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுக் கட்டணம் 450 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை மாணவர்களுக்கான ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்புக்குத் தேர்வுக் கட்டணம் 600 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

 

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'இந்த செமஸ்டர் தேர்வில் இந்த கட்டண உயர்வு இருக்காது. பழைய கட்டணமே இருக்கும்' எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களும் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கைகள் வாயிலாக வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில், நடப்பாண்டு செமஸ்டர் தேர்வுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும். மீண்டும் சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் வரை தற்போதைய நிலையே நீடிக்கும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதனால் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்