அனிதா தற்கொலை: எம்.ஜி.ஆர் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்! போலீஸ் தடியடி!
மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னை மதுராவாயலில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைகழக மாணவர்கள் இன்று காலை பல்கலைகழக நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
தொடர் மாணவர் போராட்டத்தின் காரணமாக பல்கலைகழகத்திற்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்கலைகழகத்திற்கு வந்த மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக ஷேர் ஆட்டோக்களில் ஏற்றி அவர் அவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
-அருண்பாண்டியன்
படங்கள் - அசோக்குமார்