மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து புதுக்கோட்டையில் சாலை மறியல்
புதுக்கோட்டை, செப்.1: நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தியும் புதுக்கோட்டை, அண்ணா சிலை அருகில் சாலை மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன், மக்கள் ஜனநாய கட்சியின் தலைவர் கே.எம்.சரீப், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கலைமுரசு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை. நாராயணன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
-இரா. பகத்சிங்