Skip to main content

அனில் அகர்வால் இந்தியாவில் நுழைய தடை விதிக்க கோரும் பி.ஆர்.பி.

Published on 26/06/2018 | Edited on 26/06/2018
anil

 

ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் இந்தியாவில் நுழைய தடை விதிக்க மத்திய, மாநில அரசுகளை பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

 

’’தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு பொதுக்குழு கூட்டம் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் (தென்காசி) இன்று (26.06.2018) காலை 11 மணிக்கு நடைபெற்றது.  நெல்லை மண்டல செயலாளர் எஸ்.செல்லத்துரை தலைமை ஏற்றார்.

 

அக்கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 

விவசாயிகளுக்கெதிரான தாக்குதல்கள், சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் அபரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு, காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை குறித்து விவாதித்து முதல் கட்டமாக 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

 

கூட்ட முடிவுகள் குறித்து தலைவர்  பி .ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது...

தமிழகம் முழுவதும் உயர் மின் கோபுரம், சாலை, இயற்கை வளங்கள் எடுக்கிறோம் என்கிற பெயரில் நிலம் கையகப்படுத்த சட்டத்திற்கு புறம்பாக விவசாயிகளை காவல்துறையை கொண்டு மிரட்டி, பொய் வழக்குப் போட்டு சிறையிலடைத்து சித்திரவதை செய்து அபகரி.ப்பில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. 

 

சாலை போட்டு சுங்க வரி வசூல் செய்வதில் மற்ற தொழில்களை விட பல மடங்கு  அதிகம் லாபம் ஈட்டுவதால் அதிகாரம் படைத்த அரசியல்வாதிகள், மற்றும் அவர்களின் பினாமிகள் சாலை போடும் பணியில்  களமிறங்கி வரும் நிலையில் சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு விவசாயிகளை அச்சுறுத்தி சுயநலத்திற்காக நிலம் கையகப்படுத்தி வருகிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை உடன் கை விடுமாறு வலியுறுத்துகிறோம்.

ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் இந்தியாவிற்குள் நுழைய மத்திய, மாநில அரசுகள் தடை விதித்திட வேண்டும். ஆலை மூடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த கொள்கை முடிவெடுக்க வேண்டும்.

 

காவிரி மேலாண்மை ஆனையம் உடன் கூட்டப்பட்டு கர்நாடக அனைகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.


அச்சன் கோயில், பம்பை ஆறுகளை, வைப்பாறு இணைப்புத் திட்டம் உடன் நிறைவேற்ற வேண்டும். சுமார் 7 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். தாமிரபரணி தண்ணீர் தனியாருக்கு விற்பனை செய்து கொள்ளகொடுத்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

முல்லை பெரியாறு அனை152 அடி கொள்ளவு உயர்த்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

கூட்டத்தில் ... பாலாறு வெங்கடேசன், தா.புண்ணியமூர்த்தி, சென்னை வேளச்சேரிகுமார், மதுரை ஆதிமூலம், பரமகுடி மதுரை வீரன், தேனி.செங்குட்டுவன், தூத்துக்குடி காந்திமதிநாதன், நாகை இராமதாஸ் தஞ்சை மணி, குமரி ரவி, ஏற்காடு இராமர், திருவாருர் சுப்பையன், சிவகங்கை முருகன், கடலூர் கண்ணன், திருவள்ளுர் சீனிவாசன், தேவாரம் திருப்பதி வாசகன் உள்ளிட்ட 22 மாவட்டங்களைசார்ந்த நிர்வாகிகள் /பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

’’

சார்ந்த செய்திகள்