Published on 30/09/2019 | Edited on 30/09/2019
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், அம்மாநிலத்தின் முக்கியத்தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதனையடுத்து அண்ணா பிறந்தநாள் விழாவிற்கு பரூக் அப்துல்லாவுக்கு விழா அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்றும், அவர் எங்கே இருக்கிறார் என்று தெரிய வேண்டும் என்றும் ம.தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.