புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா சிகிச்சை வார்டுகளில் தரமான உணவு, குடிதண்ணீர் மற்றும் கழிவறை வசதி குறைவு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு சிகிச்சையில் உள்ளவர்கள் கோரிக்கை வைததுள்ளனர். மேலும் இதே கோரிக்கைகளை நாம் அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். மேலும் உணவு விலை குறித்த சர்ச்சை குறித்தும் அமைச்சர் கவனதிற்கு கொண்டு சென்ற நிலையில்,
அனைத்தையும் கேட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்வார் என்று கூறினார். அதேபோல வியாழக்கிழமை இரவு, மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கரோனா சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ள ராணியார் மருத்துவமனை மற்றும் டாக்டர் முத்துலெட்சிமி ரெட்டி நினைவு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தார். இரவு உணவு வழங்கப்படும் முன்பு, உணவை சாப்பிட்டுப் பார்த்த பிறகு வழங்க அறிவுறுத்திய அவர் மேலும் நாளை முதல் அனைவருக்கும் தனித்தனியாக அம்மா குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படும் என்றார்.