தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மண்டல சிறப்புப் பேரவைக்கூட்டம் புதுக்கோட்டையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.
பேரவைக்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் தலைமை வகித்தார். விதொச மாவட்டத் தலைவர் வி.துரைச்சந்திரன வரவேற்றார். பேரவையில் கலந்துகொண்டு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.முகமதலி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்கள் சாமி.நடராஜன் (தஞ்சாவூர்), வி.சிதம்பரம் (திருச்சிபுறநகர்), எஸ்.சங்கிலிமுத்து (திருச்சிமாநகர்), என்.செல்லத்துரை (பெரம்பலூர்), கே.மகராஜன் (அரியலூர்), விதொச மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்டச் செயலாளர்கள் கே.பக்கிரிசாமி (தஞ்சாவூர்), ஏ.பழனிச்சாமி (திருச்சிபுறநகர்), பி.ரமேஷ் (பெரம்பலூர்), எம்.இளங்கோவன் (அரியலூர்) ஆகியோர் பேசினர். பேரவையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.