நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் ஏற்றுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் உள்ளிட்ட இருவர்களைத் தவிர்த்து வேறு எந்த தலைவரின் சிலைகளையும் உருவப் படங்களையும் வைக்கக் கூடாது எனச் சென்னை நீதிமன்றம் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த உத்தரவிலிருந்து அம்பேத்கருக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி இருந்தன.
இந்தநிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலாவை சந்தித்து அமைச்சர் ரகுபதி வலியுறுத்திய நிலையில், நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் ஏற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்றங்களில் எந்தத் தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடவில்லை எனத் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றங்களில் தற்போது உள்ள நடைமுறையே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.