Skip to main content

ஊரடங்கு நாளன்று திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு அனுமதி!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

Allow those who go to ceremonies like weddings on the day of the curfew!

 

தமிழ்நாடு அரசு இன்று (08/01/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா பரவலைத் தடுப்பதற்காக, அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் ஏற்கனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் திருமண அழைப்பு பத்திரிக்கைகளைக் காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. 

 

திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்