திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற திருவானைகாவல் கோயில் யானை 'அகிலா' சேற்றில் குதுகலமாக விளையாடி மகிழ்ந்த காட்சிக் காண்போரை ரசிக்க வைத்துள்ளது.
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் உள்ள யானை 'அகிலா' குளிப்பதற்காக, பிரத்யேக நீச்சல் குளம் கட்டப்பட்டது. இந்த நிலையில் வனத்துறை மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நீச்சல் குளத்தின் அருகிலேயே யானை சேற்றில் குளிப்பதற்காக 1,200 சதுரஅடியில் சேறும், சகதியுமான இடம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில், களிமண், செம்மண், மணல் ஆகியவை சுமார் ஒன்றரை அடி உயரம் கொட்டப்பட்டுள்ளது. சேற்றில் இறங்கிய யானை 'அகிலா', சேற்றுக்குள் தனது துதிக்கையை அடித்து, உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தது.
இது தொடர்பான, வீடியோ ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.