Skip to main content

விவசாயிகளுக்கு விரோதமான சட்டத்துக்கு அதிமுக துணை போய் உள்ளது - மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020
ுபர

வேளாண் மசோதாவை எதிர்த்து திமுக தலைமையில் அனைத்துக்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகள் தரப்பில் இந்திய அளவில் ரயில் மறியல் போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் பலத்த எதிர்ப்பை சந்தித்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராகத் தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்று திமுக தலைமையில் வேளாண் மசோதாக்களை எதிர்த்து மாநிலம் முழுவதும் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. காஞ்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்துக்கு அதிமுக துணை போய் உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்