பாஜகவின் நெருக்கடியில் தேமுதிகவிற்கு திருச்சி எம்.பி தொகுதி ஒதுக்கியதாக தெரிகிறது. திருச்சியில் தேமுதிகவை பொறுத்தவரையில் ஏற்கனவே தொடர்ந்து தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஏ.எம்.ஜி விஜயகுமார் என்பவருக்குத் தான் சீட்டு கிடைக்கும் அல்லது பிரேமலதா தம்பி சுதிஷ் இங்கு போட்டியிடுவார் என்றெல்லாம் கட்சிக்காரர்கள் ஆருடம் சொல்லிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் திருச்சியில் விஜயகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு மிக முக்கியமான ரசிகர்கள் பலபேர் திருச்சியில் இருக்கிறார்கள்.
ஏற்கனவே சுதிஷ் போட்டியிட்டால் எப்படி இருக்கும் என்கிற சர்வே எடுத்த அடிப்படையிலே விஜயகாந்த் மகன் தற்போது களம் இறக்கலாம் என்கிற யோசனை இருக்கிறது என்கிறார்கள் விஜயகாந்த் கட்சியில் உள்ள மேல் மட்ட நிர்வாகிகள். இதற்கிடையில் சுதிஷ், விஜயபிரபாகரன் திருச்சியில் போட்டியில்லை என்கிற முடிவுக்கு வந்தால் திரும்பவும் திருச்சியில் உள்ள தேமுதிக பிரபலங்கள் பக்கம் திரும்பியது.
திருச்சி மா.செ. டி.வி. கணேஷன் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஆனால் என்னிடம் 2 சி இருக்கு மீதி கட்சி தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதேபோல் திருச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஏ.எம்.ஜி. விஜயகுமார் நான் தொடர்ந்து தேர்தலில் செலவு செய்து கொண்டே இருக்கேன். என்னிடம் பணம் எதுவும் இல்லை. எனக்கு சீட்டு வேண்டாம் என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக தலைமை என்ன செய்வது என்று புரியாமல் விழித்தனர்.
இந்தநிலையில் தான் புதுக்கோட்டை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு வேட்பாளரை அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள் தேமுதிக உள் வட்டம் அறிந்த முக்கிய புள்ளிகளிடம் விசாரித்தால்.. திருச்சி, புதுக்கோட்டை என இரண்டு மாவட்டங்கள் இந்த திருச்சி எம்.பி தொகுதியில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய சட்டமன்ற பகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிறது.
தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் தர்மபுரியை சேர்ந்தவர். திருச்சி மாநகரில் உள்ள தொகுதிகளில் அவரின் சமூகத்தினர் அதிகமாக இருக்கிறார்கள். அதேநேரம் டாக்டர் இளங்கோவன், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமானவர். டாக்டர் என்கிற முறையில் அதிமுக தலைமைக்கு சொல்லியிருக்கிறார். நீங்க திருச்சியை கேட்டு வாங்குங்க.. நா பாத்துக்கிறேன் என்று சொல்லி தைரியம் கொடுத்து நா ஜெயிக்க வைக்கிறேன். என்று சொல்லியதால் அ.தி.மு.க. அமைச்சரின் விஜயபாஸ்கரின் சிபாரிசில் திருச்சிக்கு வேட்பாளராக வருகிறார் என்கிறார்கள்.