ஆளுநர் மாளிகை முன்பு குவிந்த அதிமுக தொண்டர்கள் - போலீஸ் குவிப்பு
இன்று அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரை சந்திக்கவுள்ளார். அவருடன் மூன்று எம்.எல்.ஏக்கள் மற்றும் ஏழு எம்.பிக்கள் உடன் செல்ல இருக்கின்றனர். இந்த சந்திப்பில் ஆளுநரிடம் டிடிவி தினகரன் மனு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்க்ள் 19 பேர் ஆளுநரைச் சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் ஆதரவு இல்லையென கடிதம் கொடுத்தனர். ஆனால், இதுகுறித்து ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, இன்று ஆளுநரை சந்திக்கும் டிடிவி தினகரன், அதே கோரிக்கையை வலியுறுத்தி மனு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, டிடிவி தினகரன் ஆளுநர் மாளிகைக்கு வருவதற்கு முன்பாகவே, அதிமுகவைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள், தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியுள்ளார். எனவே, ஆளுநர் மாளிகையின் முன்பு போலீஸார் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர்.