
கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்த பெருமழையால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு சுமார் 2 1/2 லட்சம் கனஅடி வரை உபரிநீர் வந்து பின்பு அது மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு வீணாக கடலுக்கு சென்றது. இந்தநிலையில் கடந்த வாரம் படிப்படியாக நீர்வரத்து குறைந்து மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு சீரானது.
ஆனால், தற்போது கர்நாடகாவில் மழை பொழிவு கூடுதலாகி வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 21,000 கனஅடியும் கபினியிலிருந்து 11,000 கனஅடியும் வெளியேறி வருகிறது. இது மேலும் கூடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியில் உள்ளது.
கர்நாடகாவில் திறந்து விடப்படும் உபரிநீர் மீண்டும் மேட்டூர் அணையிலிருந்து திறந்தவிடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக காவிரி கரையோர பகுதிகளுக்கு மீண்டும் வெள்ள அபாயம் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.