ஆறு ஆண்டுகளுக்கு பிறகு சீறிப் பாயும் தென்பெண்னை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டிணம்,சூளகிரி, ஒசூர், தளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் இது போல கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஓசூர் கெலவரபள்ளி அணை நிரம்பியது. இதனால் நேற்று முதல் தென்பெண்னை ஆற்றில் தண்ணீர் கூடுதலாக திறக்க பட்டது.
இதன் காரணமாக, கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு, நீர் வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் முழு கொள்ள வான 52 அடியை தாண்டியது.இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து மதகுகள் வழியாக வினாடிக்கு 3350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் பொது மக்கள் நடைபாதை மீது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால்,கிருஷ்ணகிரி , தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த, தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வெள்ளம் காரணமாக சிறு சிறு ஏரிகள் நிரம்பி உள்ளது. எனினும் ஆற்று நீர் வீணாக கடலில் கலக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும், பல ஆண்டுகளாக வறட்சி நிலவி வந்த நிலையில் , இந்த தண்ணீர் வீணாக செல்வதை, தடுத்து, ஏரிகளில் சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதனிடை கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகள், ஏரிகளை கண்காணிக்ககூடிய வருவாய், பொதுப்பணி, காவல், தீ அணைப்பு, சுகாதார துறையினர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது.
- எம்.வடிவேல்