![ADMK Women wing member arrested by virudhunagar police](http://image.nakkheeran.in/cdn/farfuture/39Gd1VB_IUgYjX34bpg2zHkPko36TXqDAmmt3JBgY-A/1675156552/sites/default/files/inline-images/th_3653.jpg)
அமல்ராணி, விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி துணைத் தலைவியாவார். இவர், தனது கணவர் சந்திரசேகரனுடன் சேர்ந்து விருதுநகர் பேராலி ரோடு, ஐடிபிடி காலனியில் வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்துள்ளார். அந்த வீட்டில் கடந்த சில நாட்களாக விவகாரமான செயல்கள் நடந்துவருவதாக, விருதுநகர் ஊரக காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து ஊரக காவல்நிலைய ஆய்வாளர் மாரிமுத்து உள்ளிட்ட காவலர்கள் அந்த வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அந்த வீட்டில் சிவகாசியைச் சேர்ந்த ஹரிபாலகுமாரும், சாத்தூர் – மேட்டமலையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இருந்துள்ளனர். விசாரணையின்போது அந்தப் பெண், தன்னுடைய குடும்பச் சூழலால் உதவிகேட்டு வந்தேன் என்றும், அமல்ராணியும் அவருடைய கணவர் சந்திரசேகரனும் பாலியல் தொழிலில் தன்னை ஈடுபடுத்தினார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
![ADMK Women wing member arrested by virudhunagar police](http://image.nakkheeran.in/cdn/farfuture/0YNHsQIHm9XFL-ynnyUbCpEGQb8Kb592lTVb1yaloag/1675156570/sites/default/files/inline-images/th-1_3655.jpg)
அதனைத் தொடர்ந்து, பாலியல் தொழில் நடத்தி சம்பாதித்து வாழ்வது, பாலியல் தொழிலில் ஈடுபட பிறரைத் தூண்டி அழைத்துச் செல்வது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் அமல்ராணி மற்றும் சந்திரசேகரன் மீது வழக்கு பதிவாகி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை விருதுநகர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.