Published on 17/07/2020 | Edited on 17/07/2020
தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் என களத்தில் பணியாற்றுபவர்களுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிற்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ முழுமையாக குணம் அடைந்து விட்டார் என மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.