கரூர் எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணியும் அதிமுக சார்பில் தம்பித்துரையும் போட்டியிடுகிறார்கள். இதில் அமமுகவில் இருந்து செந்தில்பாலாஜி ஜோதிமணிக்கு ஆதரவாக பிரச்சார யுத்தியை பயன்படுத்துவதால் தேர்தல் களம் அனல் பறந்தது. கடைசி நாள் பிரச்சாரத்திற்கு கரூர் தொகுதியில் 16 இடங்களில் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு ஆன்லைனில் விண்ணப்பம் செய்திருந்தார் செந்தில்பாலாஜி. ஆனால் தேர்தல் அலுவலர்கள் செந்தில்பாலாஜியின் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.
அதன் பிறகு செந்தில்பாலாஜியும் ஜோதிமணியும் சேர்ந்து உள்ளிருப்பு பேராட்டம் நடத்தினர். அனுமதி ரத்து செய்ததை அடுத்து திமுக வழக்கறிஞர் சட்டரீதியான போராட்டத்தை மேற்கொண்டார். இதனால் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று அறிவித்தார்.
அதன் பிறகு கடைசி நாள் பிரச்சார பேரணிக்கு இரண்டு கட்சிக்கும் அனுமதி கொடுத்தனர். இதில் அடுத்தடுத்து பேரணிக்கு அனுமதி கொடுத்ததால் கரூர் வெங்கமேடு பகுதியில் பேரணி சென்று கொண்டிருந்த போது அதிமுக, திமுக இடையே கடுமையான தடியடி பேராட்டம் நடைபெற்று அங்கிருந்தது கொடி மரங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.
இதற்கு இடையே கரூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நாஞ்சில்சம்பத் ஜீப் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. இந்த பதட்டமான சூழ்நிலையில் போலிஸ் 144 தடை உத்தரவு போட்டுள்ளது.