Skip to main content

மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

Published on 07/01/2024 | Edited on 07/01/2024
Adjournment of consultation meeting regarding Lok Sabha elections

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த சூழலில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தமிழ்நாட்டில் இன்று (07.01.2024) முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள வட கடலோர மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை (08.01.2024) முதல் 3 நாட்களுக்கு  தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாளை (08.10.2023) தேர்தல் தொடர்பான ஆலோனைக் கூட்டம் தேர்தல் ஆணையர் தலைமையில் சென்னையில் நடைபெற இருந்தது. இந்த கூட்டத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள இருந்தனர். இந்நிலையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்