சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சிநேகன் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியாவுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் பிரச்சாரத்தில் ஸ்ரீபிரியா பேசும் போது.. நல்லவர்களை நம்மவர்களை தேர்ந்தெடுங்கள். ஓட்டுச் சாவடிக்கு சென்று ஓட்டுப் போடுவது நமது கடமை. அந்த கடமை நல்லவர்களை தேர்வு செய்ய வேண்டும். அதனால் தான் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் கிடைத்திருக்கிறது.
எண்ணம் போல தான் சின்னம் அமையும். இருளை அகற்றி வெளிச்சம் கொடுக்க டார்ச் லைட். ஆனால் பரிசு கொடுப்பவர்களுக்கு பரிசு பெட்டி. ஊழல் செய்து ஒருவர் சிறையில் இருக்கிறார். அவர் பெயரில் இங்கு ஓட்டு கேட்கிறார்கள். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள் என்றார்.
அதே கூட்டத்தில் பேசிய சிநேகன்.. சிவகங்கை தொகுதியில் நிற்கும் சிநேகன் வெளியூர் காரர் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். நான் இந்த தொகுதியில் உள்ள பிரச்சனைகளை வரலாறுகளை சொல்கிறேன். எங்களை எதிர்த்து நிற்கும் 3 வேட்பாளர்களும் வரலாறு சொல்லிவிட்டால் போட்டியை விட்டு செல்கிறேன்.
எல்லாம் பணம்.. நாங்கள் 4 வாகனத்தை வைத்து பிரச்சாரம் செய்ய முடியாமல் தவிக்கிறோம். ஆனால் அவர்கள் கேரளாவில் இருந்து 40 வாகனங்களை கொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள். எனக்கு ஒரு வாரத்துக்கு ஒரு லட்சம் செலவு காட்டுகிறேன். அவர்கள் 7 500 காட்டுகிறார்கள். 2 வாரமாக கணக்கே காட்டல அவங்க.
இப்படி இருக்கும் போது.. ராஜா 40 கார்லயும், கார்த்தி 100 கார்லயும் பொம்மை முதல்வர் எடப்பாடி ஆயிரம் கார்லயும் போறதை கண்டுக்காத தேர்தல் ஆணையம், பறக்கும் படை அதிகாரிகள் 3 வாகனம் என்னுடன் வருவதை அதிக வாகனம் வருகிறது என்று தடுக்கிறார்கள் என்றார்.