Skip to main content

திருபுவனம் ராமலிங்கம் கொலைவழக்கு; திருச்சி பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தை ஆய்வு செய்யும் என்ஐஏ அதிகாரிகள்

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

திருபுவனம் பாமக நிர்வாகியான ராமலிங்கம் கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமை NIA கையில் எடுத்து பல்வேறு இடங்களில், பல கோனங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

 

ramalingam

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருபுவனத்தை சேர்ந்த பாமக பிரமுகரான ராமலிங்கம் பிப்ரவரி 5 ம் தேதி கொலை செய்யப்பட்டார், அந்த கொலையில் 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
 

இந்தநிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கேட்டுவந்தனர். அதனை தொடரந்து என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக ஏ.டி.எஸ்.பி. சவுக்கத்அலி தலைமையில் தஞ்சை, கும்பகோணம், திருபுவனம் உள்ளிட்ட பல இடங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  ராமலிங்கத்தின் மகன் மனைவியிடமும் விசாரணை நடத்தினர்.

 

ramalingam

 

அதனை தொடர்ந்து இன்று காலை 8 மணியளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஐந்துபேர். துப்பாக்கி ஏந்திய போலீஸார் ஐந்துபேர், மற்றும் ஒரு வேனில் போலீஸ் என அதிரடியாக திருச்சி பாலகரையில் உள்ள திருச்சி பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு வந்தனர். 3 வது மாடியில் அமைந்துள்ள அக்கட்சி அலுவலகத்தை திறந்து மணி கணக்கில் தீவிர சோதனை  மேற்கொண்டு வருகின்றனர். 
 

பாலகரை பகுதி பரபரப்பான, மேலும் மிக முக்கியமான இடம் என்பதால், என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திவருவது, திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனை நடத்தும் இடங்கள் மட்டுமின்றி, அந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தியுள்னர்.

 

ramalingam

 

இது குறித்து விசாரித்தோம், "ராமலிங்கம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் திருச்சி பாலகரையில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதால் அங்கு விசாரணை நடக்கிறது" என்கிறார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வில் இணைந்தார் கே.பி.ராமலிங்கம்...

Published on 21/11/2020 | Edited on 21/11/2020
former MP K.P.Ramalingam join with bjp

 

 

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பா.ஜ.க.வில் இணைந்தார். 

 

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் முன்னாள் எம்.பி., கே.பி. ராமலிங்கம் பா.ஜ.க.வில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி, "கே.பி.ராமலிங்கம் வருகையால் தி.மு.க. பலமிழக்கிறது; பா.ஜ.க. பலம் பெறுகிறது" என்றார். 

 

பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று மாலை சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

 

 

Next Story

பா.ஜ.க.வில் இணையும் திமுக முன்னாள் எம்.பி. ராமலிங்கம்...

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

former mp ramalingam join with bjp for today

 

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பா.ஜ.க.வில் இணைகிறார். 

 

சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் முன்னாள் எம்.பி. கே.பி. ராமலிங்கம் இன்று (21/11/2020) காலை 11.00 மணிக்கு பா.ஜ.க.வில் இணைகிறார். 

 

பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவியை கே.பி.ராமலிங்கம் சந்தித்த நிலையில், பா.ஜ.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.