Skip to main content

“விடுதலை போராளிகளின் ரத்தம் ராகுல்” - காயத்ரி ரகுராம் வாழ்த்து 

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

Actress Gayathri Raghuram wishes Rahul Gandhi on his birthday

 

பாஜகவிலிருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

பாஜகவிலிருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், சமீபகாலமாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் அவரது ஆதரவாளர்களையும், சில பாஜக நிர்வாகிகளையும் தொடர்ந்து சாடி வருகிறார். இதனிடையே விசிக தலைவர் திருமாவளவன் எம்.பியை நேரில் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து திமுகவின் சில நிலைப்பாடுகளைப் பாராட்டியும் ட்விட் செய்து வருகிறார். 

 

இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “உங்கள் நாட்டையோ, கட்சியையோ அல்லது உங்கள் குடும்பத்தையோ நீங்கள் கைவிடவில்லை. எத்தனை தடைகள் வந்தாலும், அவர்கள் உங்களை எப்படி கேலி செய்தாலும், எத்தனை குற்றச்சாட்டுகள் வந்தாலும், தைரியமாக எதிர்கொண்டீர்கள். உங்களுக்குள் இருக்கும் போராட்ட குணம் என்னை வியக்க வைக்கிறது, விடுதலை பெற்ற போராளிகளின் ரத்தம். பிறந்தநாள் வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு சில பாஜக ஆதரவாளர்கள் காயத்ரியைக் கடுமையாக விமர்சனமும் செய்து வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்