Skip to main content

நடிகர்கள் விஷால்,கார்த்தியிடம் விசாரணை நடத்த உத்தரவு

Published on 23/09/2017 | Edited on 23/09/2017

நடிகர்கள் விஷால்,கார்த்தியிடம் 
விசாரணை நடத்த உத்தரவு

நடிகர் சங்க கட்டிடம் உருவாக்குவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் பல முன்னணி நடிகர்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தனியார் டிவி நிறுவனம் ஒளிபரப்பியது.  இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், நடிகர் சங்க நிதியில் கையாடல் செய்திருப்பதாகவும், நடிகர் சங்க உறுப்பினர் வராகி வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று கூறியிருக்கிறது. மேலும் நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்