அன்புச்செழியன், நடிகர் விஜய் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த சோதனை தமிழ் திரைப்படத்துறையிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த சோதனை குறித்து சமூக வலைதளத்தில் பலர் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எடப்பாடி அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் எதிராக வாக்களித்தால் தொடரப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும். அந்த தீர்ப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பதவி பறிபோகும். அப்போது தனக்கு பதவி முக்கியம் அல்ல, கட்சிதான் முக்கியம் என ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவார். அதற்கு பின்புலமாக பொருளாதார உதவிக்காக அன்புச்செழியன் இருப்பார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருக்கும் அன்புச்செழியன் வீட்டில் ரெய்டு நடத்தினால், ஓ.பி.எஸ்.க்கு அவர் உதவ மாட்டார் என்றுதான் இந்த ரெய்டு நடந்ததாக பதிவிட்டு வருகின்றனர்.
இன்னொரு தரப்போ, ரஜினி தனது வீட்டின் முன் பேட்டி கொடுக்கும்போது ஒரு செய்தியாளரின் செல்போனில் அழைப்பு வரும். அந்த அழைப்பால் ரஜினி சிறிது வினாடிகள் அமைதியாக இருந்தார். அந்த அழைப்பு விஜய் பாடலின் ரிங்டோனாக இருந்ததால்தான் விஜய் வீட்டுக்கு ரெய்டு நடத்த அதிகாரிகள் சென்றதாக கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.
மேலும் ஒரு சிலரோ, ரஜினிக்கு போன் போட்ட விஜய், ஏங்கன்னா எங்க ரிங்டோன் வந்தா ரெய்டு வருமான்னா என்று கேட்க, அதற்கு ரஜினி, தம்பி வருமான வரியை ஒழுங்கா கட்டினீங்கன்னா, எந்த பிரச்சனையும் வராது என்று பதில் சொல்வது போல் பதிவிட்டுள்ளனர்.
குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில், பொதுமக்கள் பலர் அதில் கையெழுத்திட்டு வருகின்றனர். திமுகவும் பலரை கையெழுத்துப்போட ஒவ்வொரு வீதியாக செல்கிறது. அந்த வகையில் விஜய் இந்த கையெழுத்து இயத்தினரிடம் கையெழுத்து போட இருப்பதாக செய்திகள் வெளியானதால், பாஜக இந்த ரெய்டு விட்டிருப்பதாக சிலர் பதிவிட்டு வருகின்றனர்.