Skip to main content

“தடை செய்யப்பட்டப் போதைப் பொருளை விற்றால் நடவடிக்கை” - கரூர் மாவட்ட வணிகர் சங்கத் தலைவர்! 

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

"Action against sale of banned drugs" - Karur District Chamber of Commerce President!

 

கரூர் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்கத் தலைவர் ராஜூ தலைமையில் 150க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.


அதன்பின் கரூர் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்கத் தலைவர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கரூர் மாவட்டத்தில் குட்கா போன்ற போதை பொருட்கள் அதிகமாக விற்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஆய்வில் ஈடுபட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் மாநகரில் உள்ள கடையில் இருந்த பொருட்களை எல்லாம் பறிமுதல் செய்து கடையை சீல் வைத்து, அபராதம் விதித்திருந்தார்.


இந்த நிலையில் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் மாவட்ட வர்த்தக தொழில் கழகம் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினோம். அப்போது கலெக்டர் போதை பொருள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். அவ்வாறு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அவரின் அறிவுரையை ஏற்று கரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்ய வேண்டாம் என அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் கேட்டுகொள்கிறோம்.  மேலும், சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அனைத்து கடைகளுக்கும் சங்கத்தின் சார்பில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்க கூடாது என தகவல் கொடுக்கப்படும். விதிமுறைகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது சட்ட நடடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்