Skip to main content

தமிழக மீனவர்கள் 80 பேர் விடுதலை!

Published on 05/09/2017 | Edited on 05/09/2017
தமிழக மீனவர்கள் 80 பேர் விடுதலை!




இலங்கை கடற்படையால் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 80 மீனவர்கள் நேற்று (03.09.17) விடுதலை செய்யப்பட்டார்கள். 

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் திங்கள்கிழமை (04.09.17) இந்திய கடலோர கடற்படை கப்பல் மூலம் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு வந்தடைந்தனர். அவர்களை நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார், நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

 இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் தோப்புதுறை ஷேக் அப்துல்லா, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதின், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்