மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து மோதியதில் 8 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரன். கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி அவரது சொந்த ஊருக்கு தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மயிலாடுதுறை அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசுப் பேருந்து அவர்களை முந்திச் செல்ல முற்படுகையில் அவர்கள் மேல் உரசியதால் வாகனத்தில் சென்றவர்கள் கீழே விழுந்துள்ளனர். அவரின் இரண்டாம் குழந்தை அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும் குழந்தையின் உடலைக் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.