Skip to main content

‘மீண்டும்... மீண்டுமா...’ மருந்தக ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

753 crore credit in the bank account of the medical worker

 

மருந்தக  ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி வரவு வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சென்னை, தேனாம்பேட்டை பகுதியினைச் சேர்ந்த மருந்தக ஊழியரான முகமது இத்ரிஸ் என்பவரது கோட்டக் மகேந்திரா வங்கி கணக்கில் ரூ.753 கோடி  கிரெடிட்  வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைப்பார்த்து  மருந்தக  ஊழியர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

 

அண்மையில் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் மெர்கண்டைல் வங்கியிலிருந்து தவறுதலாக ரூ. 9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டு, பின்பு வங்கி நிர்வாகம் பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டது. இதேபோன்று தஞ்சாவூரில் நேற்று ஒருவரின் வங்கி கணக்கில் ரூ. 750 கோடி வரவு வைக்கப்பட்டு பின்பு வங்கி நிர்வாகத்தால் திரும்பப் பெறப்பட்டது.

 

இந்த நிலையில் மூன்றாவது முறையாக சென்னையை சேர்ந்த மருந்தக ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி வரவு வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வங்கி நிர்வாகம் பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்