சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் கடந்த 11-ந் தேதி சிவகாசி பட்டாசு கடை தொழில் அதிபர், சென்னையை சேர்ந்த ரத்தினா ஸ்டோர் உரிமையாளர்களின் குடும்ப திருமண விழா மிக ஆடம்பரமாக ஆயிரம்கால் மண்டபத்தில் நடைபெற்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார் கோவில் கருப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் இராதாகிருஷ்ணன் (60). இவர் ஒய்வு பெற்ற கூட்டுறவு சங்க சார் பதிவாளர், மேலாண்மை இயக்குனர் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியவர். புதன்கிழமை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முருகேசனை சந்தித்து மனு ஒன்றை வழங்கினார்.
அந்த மனுவில் நான் சிதம்பரம் நடராஜர் சிவகாமசுந்தரி மீது அளவு கடந்த பக்தி கொணடவன். திருவாசகம் முற்றோதல் சிதம்பரம், திருவெண்காடு, சீர்காழி, திருநள்ளாறு, வல்வதுறை பகுதியில். ஒதும் வழக்கம் கொண்டு வருகிறேன். நடராஜர் பெருமாள் மீது தீர்வு தரும் திருப்பதிகம், திருமந்திரதிரட்டு உள்ளிட்ட பன்னிரெண்டு நூல்கள் எழுதி பதிப்பு செய்து சேவை செய்து வருகிறேன். நடராஜர் மீது தீவிர பக்தி கொண்ட நான், சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் எனக்கு ஆயுள் திருஷ்டி எனும் 60-ம் ஆண்டு திருமணம் செய்ய 22.7.19 அன்று நடராஜர் கோயிலில் உள்ள செயலாளரை சந்தித்து மனு கொடுத்தேன் அனுமதி கிடைக்கவில்லை, தீட்சிதர்கள் மறுத்து விட்டனர். ஆனால் தற்போது 11.9.19 அன்று ஆயிரம்கால் மண்டபத்தில் தொழில் அதிபர்கள் திருமணம் நடந்தது.
அதை தொடர்ந்து 13-ந் தேதி பதிவு தபால் மூலம் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்தேன். அந்த கடிதத்திற்கு பதில் இல்லை. எனவே எனக்கு 10.11.19 அன்று 60-ம் ஆண்டு திருமணம் நடத்த நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் அனுமதி பெற்று தர வேண்டுகிறேன்.அதற்கு உரிய சேவை கட்டணத்தை செலுத்த தயாராக உள்ளேன். மேலும் அனுமதி மறுத்தால் நீதிமன்றம் நாடும் சூழல் உருவாகும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட இன்ஸ்பெக்டர் முருகேசன் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடம் இதை பற்றி பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.